சிறுமி மரணம்; ரிசாத் மனைவியின் மொபைல் 'ஆராய்வு' - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 July 2021

சிறுமி மரணம்; ரிசாத் மனைவியின் மொபைல் 'ஆராய்வு'

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது சிறுமி மரணத்தின் பின்னணியில் திருமதி ரிசாத் பதியுதீனின் கைத்தொலைபேசியினை ஆராய உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.


இப்பின்னணியில் சேவை வழங்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கு அவரது தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை கையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


ரிசாதின் பெற்றோர் மற்றும் குறித்த சிறுமியை அழைத்து வந்த முகவரது தொலைபேசி அழைப்புகள் , வங்கிக் கணக்கினையும் ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. ரிசாத் வீட்டில் 16 வயதையடைய முன்பாக மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவின் அடிப்படையில் பணியில் இணைந்த குறித்த சிறுமி, தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து, மரணித்திருந்தமையும், அதற்கு முன்பாகவே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment