நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த நிலையில் தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டு, காயமுற்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ள சிறுமி விவகாரம் தொடர்பில் ரிசாத் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன் தினம் வீட்டில் பணிபுரியும் நபர் ஒருவரிடம் ஆறு மணி நேரம் விசாரணை இடம்பெற்றுற்ள அதேவேளை ரிசாதின் பெற்றோரும் விசாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசாதின் மனைவியிடமும், ரிசாத் பதியுதீனிடமும் இது தொடர்பில் விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதையடைய முன்னர் சிறுமி ரிசாத் வீட்டில் வேலையிலமர்த்தப்பட்டுள்ளதுடன் மாதாந்தம் 20,000 ரூபா ஊதியம் பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment