குருநாகல்: ஞாயிறு முதல் அஹதியா பாடசாலைகள் - sonakar.com

Post Top Ad

Saturday, 3 July 2021

குருநாகல்: ஞாயிறு முதல் அஹதியா பாடசாலைகள்

 


கொரோனா தொற்றின் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள  அஹதிய்யாப் பாடசாலை மாணவர்களுக்கான  வகுப்புகளை குருநாகல் மாவட்டத்தில்   நாளை முதல் ஒன் லைன் வகுப்புக்கள் மூலமாக நடத்தப்படவுள்ளதாக  குருநாகல் மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர்  கலாநிதி பி.எம். பாரூக் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்


நாளை 04 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முதல்  9, 10 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்புக்கள் மூன்று வலயங்களாக  நடத்தப்படவுள்ளன. முதலாவதாக  குருநாகல் , இப்பாகமுவ வலயமும், இரண்டாவதாக நிகவெரடிய,  மாஹோ  வலயமும் மூன்றாவதாக  கிரிஉல்ல , குளியாப்பிட்டிய  வலயமாக  நடைபெறவுள்ளது


எனவே மாணவர் மாணவிகள் 0770550557 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சூம் இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பதாக  குருநாகல் மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர்  கலாநிதி பி.எம். பாரூக் மேலும் தெரிவித்தார்


- இக்பால் அலி

No comments:

Post a Comment