ஜப்பானிலிருந்து ஏழு லட்சம் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி! - sonakar.com

Post Top Ad

Saturday, 31 July 2021

ஜப்பானிலிருந்து ஏழு லட்சம் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி!

 


ஜப்பானிலிருந்து 728,460 ஒக்ஸ்போர்ட் அஸ்டராசெனிகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.இவை இன்றை 31ம் திகதி மாலை இலங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதே போன்று அடுத்த வாரமும் (7) இலங்கைக்கு ஒரு தொகை ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிகளை கொழும்பில் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது தடைப்பட்டதன் பின்னணியில் மக்கள் நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தமையும், ஜப்பான் நன்கொடையாகவே வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment