சமகி ஜன பல வேகயவினால் கொண்டு வரப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துப் பயணிக்கும் வேலைத்திட்டத்துக்கான முயற்சியில் இறங்கியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை முழு அமைச்சரவைக்கும் எதிரானதாக மாற்றுவதற்கு ரணில் மேற்கொண்ட முயற்சியை சஜித் அணி நிராகரித்திருந்தது. எனினும், எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை சந்தைப்படுத்துவதில் ரணில் தற்போது தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள ரணில் விக்கிரமசிங்க கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு கடுமையாக உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment