நகைப்புக்குரிய அமைச்சுக்களை உருவாக்கி அமைச்சரவை தனது பிடிக்குள் வைத்திருப்பது பசில் ராஜபக்சவே எனவும் அவர் மீள வந்தும் ஒன்றும் நடக்கப் போவதில்லையெனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமக்கு தரப்பட்ட பொறுப்பு எதுவோ அதைச் செய்ய முடியாவிட்டால் தயாசிறி விலகிச் செல்லலாம் என பெரமுன தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவின் வருகை தொடர்பில் பாரிய அளவில் பிரச்சாரம் நடாத்தப்பட்டு வருவதுடன் அவர் வந்ததும் பொருளாதாரம் மீண்டும் உயர்ந்து விடும் எனவும் நம்பிக்கையூட்டப்படுகிறது. இதேவேளை, பசில் ராஜபக்ச பிரதமருக்கு ஒப்பான இடத்தில் பெரும்பாலும் அனைத்து அமைச்சுக்களிலும் தலையிடக் கூடிய அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வார் எனவும் அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment