தேசிய வளங்களை விற்றுப் பிழைக்கும் அரசு: கிரியல்ல - sonakar.com

Post Top Ad

Friday, 9 July 2021

தேசிய வளங்களை விற்றுப் பிழைக்கும் அரசு: கிரியல்ல

 


எதிர்க்கட்சியில் இருக்கும் போது தேசிய வளங்களைப் பாதுகாக்கப் போவதாக கூக்குரலிட்டவர்கள் இன்று அவற்றை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.


கொதலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரேரணை மீதான விவாதத்தின் போதே கிரியல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். 


மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சைட்டம் உருவாக்கப்பட்டது, எனினும் கடந்த ஆட்சியில் அதற்கெதிராக மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் இலாபம் கண்டவர்கள் இப்போது கொதலாவல பல்கலைக்கழகத்தை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய முனைவது முற்றிலும் முரணான செயற்பாடுகள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment