மொபைல் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப் போவதாக வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லையென்கிறது நிதியமைச்சு.
எனினும், இவ்வருடத்திற்கான தேவையான அளவு கைத்தொலைபேசிகள் ஏலவே இறக்குமதி செய்யப்பட்டு விட்டதாகவும் இதற்கு மேல் அவசியமில்லையெனவும் நிதியமைச்சின் உயரதிகாரியொருவரை ஆதாரங்காட்டி பல ஊடகங்களில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் இறக்குமதிகளை நிறுத்தி வைத்துள்ளமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment