பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதும் அமைச்சுப் பொறுப்பையும் ஏற்று பாரிய மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக பெரமுனவின் அவரது ஆதரவாளர்கள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
எனினும், இந்த அமைச்சரவையில் இருக்கும் அனைவரும் பசில் ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்கள் எனவும் தன்னுடையது போன்று நகைப்புக்குரிய சில அமைச்சுக்களை உருவாக்கியவரும் பசில் ராஜபக்சதான் எனவும், ஆதலால் அவர் வந்தவுடன் ஒன்றும் மாறப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.
தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் பாரிய பொருளாதார பின்னடைவிலிருந்து மீள நாட்டு மக்களின் பங்களிப்பே அவசியப்படுவதாகவும் உண்மை நிலவரங்களை மக்களிடம் கொண்டு செல்வது காலத்தால் தவிர்க்க முடியாத ஒன்று எனவும் தயாசிறி தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment