விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழுள்ள கிரபைட் நிறுவனத்தையும் வேறு அமைச்சின் கீழ் மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்சவை ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டு வரும் நிமித்தம் மிகக் கடுமையாக உழைத்த விமல் - கம்மன்பில கூட்டணிக்கு எதிராக பெரமுனவில் கடுமையான நிலைப்பாடு உருவாகி வருகிறது. இந்நிலையில், அண்மையில் விமலில் பொறுப்பின் கீழிருந்த நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சின் கீழ் மாற்றப்பட்டிருந்தது.
தற்போது, மேலும் ஒரு நிறுவனத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தடவை, தமது பொறுப்பின் கீழிருந்த நிறுவனம் பறிபோனதை 'செய்தி' பார்த்தே தாமும் அறிந்து கொண்டதாக விமல் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment