சிறுவர்களை பணியிலமர்த்தல், துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்குவதற்கான விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற நிலையில் பொது மக்களிடமிருந்தும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தகவல் வழங்க 0112 433 333 என்ற தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு நகரில் 30 இடங்களில் பொலிசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment