தெஹிவளை மிருகக் காட்சி சாலை மற்றும் ரிதியாகம சபாரி பூங்காவை பொது மக்கள் பாவனைக்காக மீளத் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையும் காலை 8.30 முதல் மாலை 4 மணி வரை சபாரி பூங்காவும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் தினசரி 1500 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் சூழ்நிலையில் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment