மத்திய வங்கி பிணை முறி ஊழல் விவகாரத்தில் சிக்குண்ட அர்ஜுன் அலோசியசின் மதுபான உற்பத்தி நிறுவனம் இயங்குவதற்கு அண்மையில் அனுமதியளிக்கப்பட்டிருந்தமை சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில், இது நடைமுறை அரசுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளதாகவும் இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் அமைச்சரவையில் ஏற்பட்ட பாரிய அழுத்தத்தின் பின்னணியில் குறித்த நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிய அளவில் குற்றவாளியாகப் பேசப்பட்ட அர்ஜுன் அலோசியசுக்கு நடைமுறை அரசும் ஆதரவளித்திருந்ததன் பின்னணியில் சமூக வலைத்தளங்களில் பெருமளவு பிரச்சாரங்கள் இடம்பெற்று வந்த நிலையில் அமைச்சரவையில் இது குறித்து பேசப்பட்டு, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment