குச்சவெளியைச் சேர்ந்த கடற்றொழிலாளியொருவர் டைனமைட் விபத்தில் சிக்கி வபாத்தான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இரு பிள்ளைகளின் தந்தையான 28 வயது இமாம்தீன் முஹமத் அஸ்மீர் என்பவரே இவ்வாறு கடலுக்குச் சென்ற வேளையில் உயிரிழந்துள்ளதுடன், பிரேத பரிசோதனை திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரோடு படகில் பயணித்த மேலும் மூவர் தற்சமயம் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Faizer
No comments:
Post a Comment