இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினோபாம் தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது சீனா.
இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் விமானத்தில் இவை கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை இதுவரை 750,572 பேருக்கு இலங்கையில் சீன தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 1.1 மில்லியன் பேர் ஒரு தடவை மாத்திரம் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதத்திலிருந்து இது வரை 4.1 மில்லியன் சீன தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment