அடிப்படையற்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ள தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் ஆளுனர் அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு வழக்கின் மீதான விசாரணை ஓகஸ்ட் 10ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரதி சட்டமா அதிபர் திருமண நிகழ்வொன்றுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் நேற்றைய தினம் விசாரணைக்கு சமூகமளிக்காத நிலையில் வேறு தேதி வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அசாத் சாலி, தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை தாமதமாகி வருகின்ற அதேவேளை அரச தரப்பு அவருக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு நவம்பர் 10ம் திகதி விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment