செப்டம்பர் 1ம் திகதி வரை ஹரின் பெர்னான்டோ கைது செய்யப்பட மாட்டார் என நீதிமன்றுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது சட்டமா அதிபர் அலுவலகம்.
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் தன்னைத் தொடர்பு படுத்தி கைது செய்ய முனைவதாக ஹரின் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இவ்வாறு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஹரினை சி.ஐ.டிக்கு அழைத்து வாக்குமூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆகக்குறைந்தது வழக்கு விசாரணையின் அடுத்த திகதியான செப்டம்பர் 1ம் திகதி வரை அவர் கைது செய்யப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment