பொலிசாரை மாத்திரம் குற்றஞ் சொல்ல முடியாது: நாமல் - sonakar.com

Post Top Ad

Saturday, 10 July 2021

பொலிசாரை மாத்திரம் குற்றஞ் சொல்ல முடியாது: நாமல்

 


உலகமே பெருந்தொற்று அபாயத்தில் இருக்கும் நிலையில் சுகாதார விதிமுறைகளை கடுமையாக அமுல் படுத்த வேண்டிய தேவையிருப்பதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.


மக்களுக்கு ஆர்ப்பாட்டங்களை நடாத்த உரிமையுள்ளது. எனினும், அதற்கான சூழ்நிலையைக் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளதால் பொலிசாரின் நடவடிக்கைகளை குற்றஞ் சொல்லவும் முடியாது என அவர் விளக்கமளித்துள்ளார்.


கொத்தலாவல பல்கலை விவகாரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை பொலிசார் கைது செய்தமைக்கு எதிராக தற்போது அடிப்படை உரிமை மீறல் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment