இலங்கையில் சுகாதாரத்துறையினர் அறிவித்திருந்த கொரோனா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ஏலவே 41 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் எண்ணாயிரத்துக்கு அதிகமானோருக்கு எதிராகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமிடத்து தலா 10,000 ரூபா அபராதம் மற்றும் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படக் கூடும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் விதி மீறல்களில் ஈடுபட்டோரை பொலிசார் தூக்கிச் சென்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment