வீட்டுக்கு வீடு தென்னை மரம் (தொரின் தொரட்ட கப்ருக) எனும் பெயரிலான 40 லட்சம் தென்னங்கன்றுகளை நடும் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கொட்டுவ - புஜ்ஜம்பொலஇ வெலிகெட்டிய தோட்டத்தில் நேற்றைய தினம் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வருடாந்த தேங்காய் அறுவடையை 3600 மில்லியனாக அதிகரிக்கும் திட்டத்துக்கமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment