15 வயது சிறுமியை பாலியல் விவகாரங்களில் ஈடுபட வைத்து, இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்து வந்த விவகாரத்தின் பின்னணியில் இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இறுதியாக, கொழும்பின் முன்னணி வைத்தியசாலையொன்றில் பணியாற்றும், பண்டாரகமயைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணர் ஒருவரும், கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்னும் சிலரைக் கைது செய்வதற்கான தேடல் இடம்பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மாலைதீவு அமைச்சர் ஒருவரும் மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment