ரிசாத் பதியுதீன் வீட்டில் பணி புரிந்த சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ரிசாதின் மனைவி, மாமனார் இவ்விவகாரத்திலும் மேலும் ஒரு முன்னாள் பணிப்பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் ரிசாதின் மைத்துனரும் நீதிமன்ற அனுமதியுடன் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுடன் கைதான முகவரின் வங்கிக் கணக்குகள் ஆராயப்படுவதாகவும் அவரது வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தின் மூலம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment