நம்பிக்கையில்லா பிரேரணை: ஜுலை 19-20 விவாதம் - sonakar.com

Post Top Ad

Monday, 5 July 2021

நம்பிக்கையில்லா பிரேரணை: ஜுலை 19-20 விவாதம்

 


அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜுலை 19 மற்றும் 20ம் திகதிகளில் விவாதிக்க அனுமதிக்க தீர்மானித்துள்ளார் சபாநாயகர்.


நாளை முதல் 9ம் திகதி முதல் நாடாளுமன்றம் தொடராகக் கூடவுள்ள அதேவேளை குறித்த பிரேரணை ஜுலை 19ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எரிபொருள் விலையுயர்வு, அதனைத் தொடர்ந்து அமைச்சர் மீதான ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் எதிர்க்கட்சியினர் இந்நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர். எனினும், கம்மன்பிலவை தோற்கடிப்பது அரசைத் தோற்கடிப்பதாகும் என்பதால் ஆளுங்கட்சி அவரைக் காப்பாற்றும் என அண்மையில் திலும் அமுனுகம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment