நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் தன்னைத் தானே எரியூட்ட முனைந்து தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்ததன் பின்னணியிலான விசாரணைகள் தொடர்கின்றன.
இந்நிலையில், கடந்த ஒக்டோபரில் குறித்த சிறுமியை பெற்றோர் அழைத்து வந்து ரிசாத் வீட்டில் பணியில் இணைத்த போது சிறுமிக்கு 15 வயது என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இப்பின்னணியில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இறந்த சிறுமியின் தாயிடம் இரண்டாவது தடவை விசாரணை நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் ரிசாத் பதியுதீன், தற்சமயம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment