பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் அதிக பட்சமாக 100 பேருக்கே தொழுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது சுகாதார அமைச்சு.
சமூக இடைவெளி கட்டாயமாகப் பேணப்பட வேண்டும் எனவும் அதற்கான தெளிவான அடையாளமிடல் அவசியம் எனவும் தொழ வருபவர்கள் தமக்கான விரிப்பை (முசல்லா) கொண்டு வர வேண்டும் எனவும் சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிய அளவில் கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்டாலும் தொழுகையில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment