முகநூலில் தனிநபர் ஒருவரைப் பற்றி அவதூறான பதிவு வெளியிட்டதாகக் கூறி இரு நபர்களை கடத்திச் சென்று, சிலுவையில் அறைந்து துன்புறுத்திய சம்பவம் பலகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் (25) குறித்த நபர்களை வீடொன்றுக்கு அழைத்த குண்டர்கள், அங்கிருந்து அம்பிட்டிய பகுதிக்குக் கடத்திச் சென்று, சிலுலையில் ஆணி கொண்டு அறைந்து அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. காயப்பட்ட நபர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30 வயதான துஷ்மந்த எனும் நபர் பிரதான சந்தேக நபராக அடையாளங் காணப்பட்டுள்ள போதிலும் இருவரையும் கடத்திய 8 பேர் கொண்ட கும்பல் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் தேடப்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தகவல் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment