கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் கும்பல் ஒன்று எரிவாயு சிலின்டர் மோசடியில் ஈடுபடுவதாக நுகர்வோர் அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது.
12.5 கிலோ எடையுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் சிலின்டர்களில் அதற்கான நிறை இல்லையெனவும் இது திட்டமிட்டு நடாத்தப்படும் மோசடியெனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய போக்குவரத்து தடையின் மத்தியில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட 10 சிலின்டர்களை பரிசோதித்த போதே இம்மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment