விமல் வீரவன்சவை 'அவமதித்து' விட்டார்கள்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 June 2021

விமல் வீரவன்சவை 'அவமதித்து' விட்டார்கள்: கம்மன்பில

 


விமல் வீரவன்சவுக்கு வழங்கப்பட்ட அமைச்சின் கீழியங்கி வந்த லங்கா பொஸ்பட் நிறுவனத்தை அவருக்கும் அறிவிக்காமல் நீக்கி விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வந்தமை அவரை அவமதித்த செயல் என தெரிவிக்கிறார் கம்மன்பில.


குறித்த நிறுவனம் நீக்கப்பட்டுள்ளதை செய்தி குறுந்தகவல் ஒன்றின் ஊடாகவே தானும் அறிந்து கொண்டதாக விமல் வீரசன்ச தெரிவித்ததாகவும் கூட்டணி அரசொன்றில் இவ்வாறான செயற்பாடு இடம்பெற்றிருப்பதன் ஊடாக உள்ளே எரிந்து கொண்டிருந்த நெருப்பு வெளியில் தெரிய ஆரம்பித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


விமல் வீரவன்சவை அழைத்து, அவரோடு கலந்துரையாடி விட்டு இதனை செய்திருந்தால் அதில் சர்ச்சைகள் உருவாகியிருக்காது எனவும் கம்மன்பில தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment