நாடாளுமன்றுக்கு மீளவும் செல்வதற்குத் தனக்கு எவ்வித விருப்பமும் இருக்கவில்லையெனவும் பலரின் வற்புறுத்தலிலேயே தான் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
குறுகிய காலத்துக்குள் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ள இவ்வரசாங்கம் இதுவரை மாற்றுத் தீர்வுகளை முன் வைக்கத் தவறியுள்ளதாகவும் இந்நிலையில் நாடாளுமன்றில் தமது குரலின் அவசியம் உணரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இப்பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகும் தாம் புதிய வியூகம் அமைத்து, புதிய அரசியல் பயணத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment