வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, கணிசமான அளவு மரணங்கள் வீடுகளில் இடம்பெற்று வருவதுடன் பெரும்பாலும் சிரேஷ்ட பிரஜைகளே இவ்வாறு மரணிக்கின்றனர். இந்நிலையில், வீடுகளில் இடம்பெறும் மரணங்களுக்கு கொரோனா பரிசோதனை நடாத்தாமலே இறுதிக் கிரியைகளை நடாத்த அனுமதிக்கும் வகையில் திடீர் மரண பரிசோதனை மற்றும் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பப் பட்டு வருவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 3000த்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment