உதய கம்மன்பில அமைச்சுப் பதவியிலிருநது விலக வேண்டும் என்ற கோரிக்கையில் எதுவித மாற்றமும் இல்லையெனவும் அந்த நிலைப்பாடு தொடர்வதாகவும் தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்.
எரிபொருள் விலையுயர்வின் பின்னணியில் ஜனாதிபதியும் பிரதமரும் இருப்பதாக கம்மன்பில தெரிவிக்கின்ற போதிலும், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கம்மன்பில பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என அக்கட்சிக்குள் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாகர காரியவசம் இன்று (16) அதனை மீண்டும் வலியுறுத்தியுள்ள அதேவேளை சமகி ஜன பல வேகய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன் வைக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment