தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல வாய்ப்பளிப்பதில்லையென்ற தனது கொள்கையை ரணில் விக்கிரமசிங்கவே மீறியுள்ளதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
2015 பொதுத் தேர்தலின் பின்னர் இவ்விகாரத்தில் விடாப்பிடியாக இருந்த ரணில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி, ஐக்கிய தேசியக் கட்சிக்கான தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக வரப் போவது குறித்தே ராஜித இவ்வாறு தெரிவிக்கிறார்.
தேர்தல் உடன்படிக்கை பிரகாரம் தமது கட்சியில் தோல்வியுற்ற எவரையும் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு ரணில் அனுமதித்திருக்கவில்லையென்பதும் ரோசி சேனாநாயக்க இதனால் கடந்த தடவை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment