வெள்ளை வேனில் கடத்திக் கைது: அசேல சம்பத்! - sonakar.com

Post Top Ad

Sunday, 27 June 2021

வெள்ளை வேனில் கடத்திக் கைது: அசேல சம்பத்!

 


கொரோனா தடுப்பூசி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நுகர்வோர் உரிமை அமைப்பைச் சார்ந்த அசேல சம்பத் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


எனினும், சீருடையும் இல்லாத எதுவித முன்னறிவிப்பும் தரப்படாத நிலையில் வெள்ளை வேன் ஒன்றில் வந்தவர்கள் தன்னைக் கடத்திச் சென்றதாகவும் இது குறித்த தகவல்கள் தனது குடும்பம் மற்றும் சட்டத்தரணியினால் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்காவிட்டால் தன்னைக் கொலை செய்திருப்பார்கள் எனவும் அவர் தெரிவிக்கிறார்.


இதற்கு முன்னர் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்குச் சென்ற போது தன்னைக் கைது செய்திருக்கலாம். அல்லது, விசாரணைக்காக அழைத்திருக்கலாம். மாறாக, வெள்ளை வேனில், சிவில் உடையில் வந்து கடத்திச் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லையென அவர் தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment