எரிபொருள் விலையுயர்வு தொடர்பிலான சர்ச்சையைப் பெரிதாக்க வேண்டாம் என தெரிவிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, உலக சந்தையில் விலை குறையும் போது இலங்கையிலும் எரிபொருள் விலை குறையும் என தெரிவிக்கிறார்.
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தன்னிச்சையாக எரிபொருள் விலையை உயர்த்தியதாக ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன சர்ச்சையை உருவாக்கியிருந்தது. எனினும், இதனூடாக ஜனாதிபதியும் பிரதமருமே அவமானப்படுத்தப்படுவதாகவும் தான் அதற்குப் பொறுப்பில்லையெனவும் கம்மன்பில பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், கருத்துக் கூறும் உரிமை யாருக்கும் இருக்கிறது எனவும் ஆனாலும் 'வேறு' வழியின்றியே விலையுயர்த்தப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment