மஹிந்தவை பார்க்கச் சென்ற மஸ்தானுக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 June 2021

மஹிந்தவை பார்க்கச் சென்ற மஸ்தானுக்கு கொரோனா

 


பிரதமரை பார்ப்பதற்காகச் சென்றிருந்த வேளையில் பரீட்சிக்கப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமரைக் காணச் செல்வோருக்கு அலரி மாளிகையில் அன்டிஜன் பரிசோதனை நடாத்தப்படுவதாகவும், இதன் போதே அங்கு சென்ற காதர் மஸ்தான் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தற்சமயம், இலங்கையில் 31,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment