எரிபொருள் விலையுயர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த விவகாரம் நாட்டில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அரசாங்கம் விடய அமைச்சரான கம்மன்பிலவே இதற்குப் பொறுப்பெனக் கூறி அவரை பதவி விலகுமாறு கட்சி மட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயினும், அரசாங்கத்தின் தீர்மானத்தை தனியொரு அமைச்சர் அதுவும் அரசுக்குத் தெரியாமல் மேற்கொள்வதற்கான சாத்தியம் எங்கிருந்து வருகிறது? என கேள்வியெழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
பொதுவாக அமைச்சரவையே இதற்கான அனுமதியை வழங்கும் வழக்கமிருக்கையில் தனி நபர் எவ்வாறு பொறுப்பாக முடியும்? எனவும் கேள்வியெழுப்பியுள்ள அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரும் உள்ளடங்கும் அமைச்சின் துணைக்குழுவிலேயே விலையுயர்வு தீர்மானிக்கப்பட்டதாக கம்மன்பில தெரிவித்திருந்தமை பொய்யா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு முன்னரும் மக்கள் விரோத தீர்மானங்கள் அறிவிக்கப்பட்ட போது வாய் மூடியிருந்த ஆளுங்கட்சி இந்த விவகாரத்தில் மாத்திரம் இராஜினாமா நாடகமாடுவதேன் எனவும் சஜித் அறிக்கை மூலமாக கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment