எரிபொருள் விலையுயர்வின் பின்னணியில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள கடிதத்தில், ஏலவே கொரோனா பாதிப்பினால் அல்லலுறும் மக்கள் மீது எரிபொருள் விலையுயர்வு ஊடாக மேலும் சுமையேற்றப்படுவது அதிருப்தியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் கம்மன்பிலவை பதவி விலகுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment