கட்சி இணக்கப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் ஜுலை முற்பகுதியில் அத்துராலியே ரதன தேரர் இராஜினாமா செய்வார் எனவும் அதன் பின் தான் நாடாளுமன்றம் செல்லலாம் எனவும் ஞானசார காத்திருக்கிறார்.
முதலில் ரதன தேரர் மூன்று மாத காலத்துக்கே நாடாளுமன்றில் இருப்பார் என முடிவாகியிருந்ததாகவும் அவர் ஆறு மாதம் இருந்தாலும் ஆட்சேபனையில்லையென ஞானசார ஒப்புதல் வழங்கியிருந்ததாகவும் அபே ஜனபல கட்சியின் தவிசாளர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், ஜனவரி 5ம் திகதி பதவியேற்ற ரதன தேரரின் ஆறு மாத காலம் ஜுலை 5ம் திகதி முடிவுறவுள்ளதாகவம் அவர் இராஜினாமா செய்ததும் ஞானசார நாடாளுமன்ற உறுப்பினராவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment