கொவிட் 19 தொற்றின் பின்னணியிலான மரண எண்ணிக்கைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்நிலையில், இதற்கான காரணம் உடனடியாக மருத்துவ உதவியை நாடாதமையே என தெரிவிக்கிறார் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் டொக்டர் ரஞ்சித் பட்டுவன்தொடுவ.
60 வயதுக்கு மேற்பட்டோரின் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் 'பொதுவான' அறிகுறியென எதுவும் இல்லையெனவும் மக்கள் தமக்குத் தொற்று ஏற்பட்டிருந்தால் உடனடியாக அதற்கான மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவம் விளக்கமளித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதி இல்லாத காரணத்தினால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் வீடுகளில் நிகழும் மரணங்கள் தினசரி பட்டியலில் இணைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment