எரிவாயு விலை நிர்ணய பணியினை மேற்கொள்ளும் உப குழுவிலிருந்து தான் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார் உதய கம்மன்பில.
ஜனாதிபதி - பிரதமர் உள்ளடங்கலான இக்குழுவே எரிவாயு விலையை தீர்மானிக்கின்ற போதிலும் அண்மைய விலையுயர்வுக்கு கம்மன்பிலவே பலிக்கடாவாக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், பசில் ராஜபக்சவின் வருகையைத் தொடர்ந்து விலைக்குறைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழ்நிலையில் தான் குறித்த உபகுழுவிலிருந்து விலகிக் கொள்வதாக கம்மன்பில தெரிவித்துள்ளமையை பந்துல குணவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment