துமிந்த மா. சபை தேர்தலில் போட்டியிட திட்டம் - sonakar.com

Post Top Ad

Saturday, 26 June 2021

துமிந்த மா. சபை தேர்தலில் போட்டியிட திட்டம்

 


மாகாண சபை தேர்தல்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையாகியுள்ள துமிந்த சில்வா போட்டியிட திட்டமிடுவதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெரும்பாலும் மேல் மாகாண சபைக்காக போட்டியிடக் கூடும் எனவும் பெரமுனவின் பிரதம வேட்பாளராகக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் பல நீதிபதிகளால் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த இவ்வாரம் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவினால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment