மஹிந்தவே 'இலக்கு': வெளிநாட்டிலிருந்து 'சதி': கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday, 15 June 2021

மஹிந்தவே 'இலக்கு': வெளிநாட்டிலிருந்து 'சதி': கம்மன்பில

 


தன்னைப் பலவீனப்படுத்துவதன் ஊடாக மஹிந்த ராஜபக்சவை பலவீனப்படுத்துவதே இலக்கு என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.


எரிவாயு விலையுயர்வின் பின்னணியில் கம்மன்பிலவுக்கு எதிரான நிலைப்பாடு பெரமுனவுக்குள் அதிகரித்துள்ளது. எனினும், இது வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டப்பட்டுள்ள சதியெனவும் அதன் பிரதான இலக்கு மஹிந்த ராஜபக்ச எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


எரிவாயு விலையுயர்வின் இறுதி முடிவு அமைச்சரைச் சார்ந்தது என பெரமுனவின் ஒரு பக்கம் தெரிவிக்கின்ற போதிலும் மறு பக்கத்தில் கம்மன்பிலவுக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment