ஏறாவூரில் கொரோனா விதிகளை மீறி வெளியில் நடமாடிய மக்களை முழந்தாழிட வைத்த சிப்பாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவம் தெரிவிக்கிறது.
சட்டத்தைத் தம் கையிலெடுத்த குறித்த சிப்பாய்கள், தண்டனை விதிகளுக்கு முரணாக வீதியில் பொதுமக்களை முழந்தாழிட வைத்திருந்த புகைப்படங்கள் வெகுவாக சமூக வலைத்தளங்களில் பரவியிருந்ததுடன் இராணுவ ஆட்சி மலர்ந்து விட்டதாக விமர்சனங்களையும் தோற்றுவித்திருந்தன.
இந்நிலையிலேயே, குறித்த சிப்பாய்களை ஏறாவூரிலிருந்து அகற்றி விட்டதாகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இராணுவம் விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment