நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாச்சாரம் முற்றாக மாற்றம் பெற வேண்டும் என்று தெரிவிக்கிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
தற்போதைய அரசியல் கலாச்சாரத்தினை மக்கள் நிராகரித்து வருவதோடு அரசியல்வாதிகளை வெறுப்பதாகவும், நாட்டுக்கு புதிய அரசியல் கலாச்சாரம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்திருந்த நிலையில், கட்சிக்குக் கிடைத்திருந்த தேசியப் பட்டியல் ஊடாக தற்போது ரணில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment