இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
தேசிய திட்டத்தின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவி அதனூடாக இதனை சாத்தியப்படுத்தப்போவதாக நாமல் விளக்கமளித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களின் தேவைகளுக்கேற்பவே கடந்த காலங்களில் தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தேசிய திட்டம் என்ற பொதுத் தன்மை இல்லாமலிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment