கொரோனாவின் போர்வையில் நாட்டை மூடி வைத்திருக்காமல் இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு நாட்டைத் திறந்து விடுமாறு கோரி பௌத்த பிக்கு ஒருவர் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
தம்புள்ள பொருளாதார மையம் அருகே அமர்ந்திருந்து இவ்வாறு போராடியவர் திம்புலாகல விகாரையில் பணியாற்றும் மாத்தளை சாசனரத்ன தேரர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பின்னர் நகரபிதாவின் தலையீட்டில் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொள்ள வழி செய்து கொடுக்கப்பட்டதையடுத்தே குறித்த பிக்கு அங்கிருந்து நகர்த்தப்பட்டிருக்கிறார்.
அவரிடம் வாக்குமூலத்தைப் பெற்று விட்டு பொலிசார் அவரை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment