அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் எரிபொருள் விலையுயர்வுக்கு தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசில் ராஜபக்ச இருந்திருந்தால் எரிபொருள் விலையுயர்வு இடம்பெற்றிருக்காது என பெரமுனவின் ஒரு தொகுதியினர் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, கம்மன்பிலவே தன்னிச்சையாக விலையுயர்த்தி விட்டார் ஆதலால் அவர் பதவி விலக வேண்டும் என பெரமுன செயலாளர் தெரிவித்திருந்தார்.
எனினும், கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு ஆளுங்கட்சி ஒன்றிணைந்து விட்டதாகவும் ஆதலால் குறித்த பிரேரணையில் பயனில்லையெனவும் அண்மையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும், இந்நிலையில் பசில் நாடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment