ஜுலை முற்பகுதியில் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மேலும் சில மாற்றங்களும் புதிய நியமனங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆகக்குறைந்தது ஒரு அமைச்சுப் பதவி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அல்லது எஸ்.பி. திசாநாயக்க இந்நியமனத்தைப் பெறலாம் என சு.க வட்டாரத்தில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், மைத்ரி தனக்காக எந்த அமைச்சையும் கேட்கவில்லையென அவரது செயலாளர் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, பசில் ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சொன்றை வழங்கி அதன் கீழ் முக்கிய பொறுப்புகள் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment