ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எஸ்.பி. திசாநாயக்க ஆகிய இருவரில் ஒருவர் பதவியைப் பெறலாம் என எதிர்வுகூறல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், சுற்றுப்புறச் சூழல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சை மைத்ரிபால சிறிசேன கேட்டிருப்பதாகவும் சில சிங்கள ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனை ஊடக அறிக்கை மூலம் மறுத்துள்ள மைத்ரிபால சிறிசேன, தான் அவ்வாறு பதவிகளை கேட்டு எடுப்பதில்லையென விளக்கமளித்துள்ளமையும் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment