பதவியை விட்டுக் கொடுப்பதற்காக தான் சொகுசு வாகனத்தைப் பெற்றுக்கொள்ளவில்லையெனவும் அதனை அத்துராலியே ரதன தேரரே வாங்கிக் கொடுத்ததாக உலாவரும் தகவல்களிலும் உண்மையில்லையெனவும் குறித்த வாகனம் அமெரிக்காவில் குடியிருக்கும் வர்த்தகர் ஒருவரினால் தனக்கு வழங்கப்பட்டதெனவும் தெரிவிக்கிறார் ஞானசார.
ஜுலை 5ம் திகதியுடன் அத்துராலியே ரதன தேரர் பொருந்திக் கொண்டபடி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஞானசார மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், ஞானசாரவுக்கு விட்டுக் கொடுக்கவோ தான் பதவியை இராஜினாமா செய்யவோ போவதில்லையென ரதன தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment